செல்வமகள் சேமிப்பு திட்டம்

 

செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கப்போறீங்களா? இதை  முதலில் படியுங்க....


               

 


 

இந்திய அஞ்சல் துறை மூலம் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் விளங்குகிறது. செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பிறந்த பெண் குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கணக்கை துவங்கலாம்.

அதாவது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஞ்சல் அலுவலகத்தில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கை துவங்கலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆகும்.இந்த சேமிப்பில் குறைந்தபட்ச தொகை 250 ரூபாய் முதல் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை டெபாசிட் செய்ய முடியும்.

250 ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை டெபாசிட் பண்ண முடியும். அதாவது மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது டெபாசிட் செய்யலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

அதாவது பிறந்த உடனே முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பிறந்த பிறப்பு சான்றிதழ் பெற்றவுடன் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களுடைய ஆதார் அட்டை எண்,ஃபான் கார்டு,2 ஃபோட்டோ வைத்து பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை துவங்கிட முடியும்.

சேமிப்பு கணக்கினை ஆரம்பிக்கும் நாள் முதல் 21 வருடம் முடிந்து இந்த சேமிப்பு கணக்கு முதிர்ச்சி அடையும். 21 வருடம் முடிந்த பிறகு தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு முன்னதாக பணத்தை எடுக்க நினைத்தால் குழந்தையின் வயது 18 நிரம்பி இருக்க வேண்டும்.

அதாவது குழந்தையின் படிப்பிற்கோ அல்லது திருமணத்திற்கோ தேவைப்பட்டால் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் கணக்கினை துவங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரை கணக்கினை துவங்க முடியும்

Comments

Popular Posts